இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஜுன்.22) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 990 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 6 ஆயிரத்து 894 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 6,895 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 6 லட்சத்து 84 ஆயிரத்து 519 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 24 லட்சத்து 36 ஆயிரத்து 819 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டன. இவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 56 ஆயிரத்து 886 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 13 ஆயிரத்து 156 பேர் மேலும் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 48 ஆயிரத்து 353 என உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துமனைகளில் 58 நோயாளிகளும், அரசு மருத்துவமனைகளில் 136 நோயாளிகளும் என 194 பேர் மேலும் இறந்தனர். இதன் மூலம் இருந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 580 என உயர்ந்துள்ளது.
கோயம்புத்தூரில் 870 நபர்களும், ஈரோட்டில் 741 நபர்களும், சேலத்தில் 485 நபர்களும், திருப்பூரில் 434 நபர்களும், சென்னையில் 410 நபர்களும், தஞ்சாவூரில் 372 நபர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 5,30,034
கோயம்புத்தூர் - 2,14,256
செங்கல்பட்டு - 1,54,709
திருவள்ளூர் - 1,09,875
சேலம் - 84,826
திருப்பூர் - 79,621
ஈரோடு - 85,184
மதுரை - 71,566
காஞ்சிபுரம் - 69,544
திருச்சிராப்பள்ளி - 67,617
தஞ்சாவூர் - 61,527
கன்னியாகுமரி - 58,186
கடலூர் - 56,910
தூத்துக்குடி - 53,758
திருநெல்வேலி - 47,162
திருவண்ணாமலை - 48,076
வேலூர் - 46,453
விருதுநகர் - 43,957
தேனி - 41,851
விழுப்புரம் -41,850
நாமக்கல் - 42,995
ராணிப்பேட்டை - 40,238
கிருஷ்ணகிரி - 38,883
நாகப்பட்டினம் - 37,325
திருவாரூர் - 36,270
திண்டுக்கல் - 31,215
புதுக்கோட்டை - 26,363
திருப்பத்தூர் - 27,249
தென்காசி - 26,319
நீலகிரி - 27,464
கள்ளக்குறிச்சி - 26,126
தர்மபுரி - 23,641
கரூர் - 21,582
ராமநாதபுரம் - 19,399
சிவகங்கை - 17,090
அரியலூர் - 14,365
பெரம்பலூர் - 10,825
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,005
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
ரயில் மூலம் வந்தவர்கள் - 428