தமிழ்நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 31) 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 859ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,778 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 956ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 97 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களில் ஏற்கெனவே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பது அதிகமாக இருக்கிறது.
தலைநகர் சென்னையில் 1,013 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 12 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:
சென்னை - 99,794 பேர்
செங்கல்பட்டு - 14,534 பேர்
திருவள்ளூர் - 13,836 பேர்
மதுரை - 11,009 பேர்
காஞ்சிபுரம் - 9,094 பேர்
விருதுநகர் - 7,865 பேர்
தூத்துக்குடி - 7,107 பேர்
திருவண்ணாமலை - 6,052 பேர்
வேலூர் - 5,875 பேர்
திருநெல்வேலி - 5,212 பேர்
தேனி - 5,028 பேர்
ராணிப்பேட்டை - 5,130 பேர்
கன்னியாகுமரி - 4,693 பேர்
கோயம்புத்தூர் - 4,821 பேர்
திருச்சிராப்பள்ளி - 4,146 பேர்
கள்ளக்குறிச்சி - 3,745 பேர்
விழுப்புரம் - 3,764 பேர்
சேலம் - 3,622 பேர்
ராமநாதபுரம் - 3,255 பேர்
கடலூர் - 3,088 பேர்
திண்டுக்கல் - 2,812 பேர்
தஞ்சாவூர் - 2,748 பேர்
சிவகங்கை - 2,365 பேர்
தென்காசி - 2,032 பேர்
புதுக்கோட்டை - 2,167 பேர்
திருவாரூர் - 1,693 பேர்
திருப்பத்தூர் - 1,146 பேர்
அரியலூர் - 918 பேர்
கிருஷ்ணகிரி - 968 பேர்
திருப்பூர் - 873 பேர்
தருமபுரி - 761 பேர்
நீலகிரி - 766 பேர்
ஈரோடு - 724 பேர்
நாகப்பட்டினம் - 735 பேர்
நாமக்கல் - 652 பேர்
கரூர் - 496 பேர்
பெரம்பலூர் - 477 பேர்
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 813 பேர் ;
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 576 பேர் ;
ரயில் மூலம் வந்தவர்கள் - 425 பேர்
இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்