தமிழ்நாட்டில் மேலும் 2,396 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் மேலும் 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று 1,142 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே நாளில் கரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை குணமடைந்துள்ளனர் எண்ணிக்கை 31,316 தாண்டியது.
தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,254 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,641ஆக உயர்ந்துள்ளது.