தமிழ்நாட்டில் இன்று 1,843 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் ஆயிரத்து 843 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் கரோனாவுக்கு 44 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 479 ஆக அதிகரிப்பு. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 797 பேர் குணமடைந்து குணமடைந்து, வீடு திரும்பினர்.
தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 504ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,257 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது.