ETV Bharat / state

தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு டிவிட்டர் பக்கம் ஹேக்.!

author img

By

Published : Feb 9, 2023, 2:01 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு டட்விட்டர் கணக்கை ஹேக் செய்த நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர்
ட்விட்டர்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு தங்களது சமூக வலைத்தளம் மூலமாக அரசியல் தொடர்பான பரப்புரைகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாவட்ட இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால், டிவிட்டர் மூலமாக பல்வேறு பரப்புரை சிறுபான்மை பிரிவு சார்பில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவின் டிவிட்டர் பக்கம் திடீரென நேற்று (பிப் 8) ஹேக் செய்யப்பட்டு, wow store என்ற அரபு மொழி பக்கமாக மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவின் மாநில தலைவர் அஸ்லாம் பாஷா நேற்று ஆன்லைன் மூலமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ட்விட்டர் பக்கம் ஹேக்
ட்விட்டர் பக்கம் ஹேக்

அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவின் டிவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு இமெயில் ஐடி மாற்றப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்கு மூலமாக பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், உடனே ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் பக்கத்தை மீட்டு, மர்ம நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரோடு மாவட்ட இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இது போன்று ஹேக் செய்யப்பட்டுள்ளதால் குளறுபடி நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ட்விட்டர் புளூ பயனர்களுக்கு அடுத்த ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.