தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “2020ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கு, தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள மாநில ஹஜ் கமிட்டிக்கு 6,028 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் ஏழு குழந்தைகளும் அடங்கும். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 3,736 இடங்களைத்தான் இந்திய ஹஜ் கமிட்டி ஒதுக்கீடு செய்துள்ளது.
மற்ற பயணிகளும் தங்கள் விண்ணப்பங்கள் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆதலால், ஹஜ் கமிட்டி பரிந்துரைத்த 6,028 பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும். மத்திய அரசின் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தாமல் உள்ள மற்ற மாநிலங்களின் இடங்களைத் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கித் தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: 'கட்சியில் உழைத்தவர்களுக்கே இனி சீட்' - அமைச்சர் பாண்டியராஜன் உறுதி