ETV Bharat / state

6 புதிய தொழிற்பூங்காக்களில் 2,934 கோடி ரூபாய் செலவில் நவீன உள்கட்டமைப்பு! - தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: சிப்காட் நிறுவனம் புதிதாக அமைக்கவுள்ள தொழிற்பூங்காக்களில் 2,934 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

tamilnadu-cm-palanisamy-announcements-about-sipcot-park-development

author img

By

Published : Mar 24, 2020, 3:08 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தொழில் துறை குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். அதில், ''தொழில் வளர்ச்சியில், தமிழ்நாடு மேலும் மேன்மை அடையும் வகையில் சிப்காட் நிறுவனம் சிறுசேரி, நாவலூர் ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், கரையினை உறுதிப்படுத்தி, நடைபாதை வசதி, சைக்கிள் பாதை வசதிகளுடன் பூந்தோட்டத்துடனான இயற்கை பூங்கா 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதன்மூலம் சிப்காட் சிறுசேரி தகவல் தொழிற்நுட்பப் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்களும், பொதுமக்களும் பயனடைவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கும் பொருட்டு, கெலவரப்பள்ளி அணைக்கட்டிலிருந்து நீரைப்பெற்று, அந்நீரை சுத்திகரித்து ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள சுமார் 355 தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென நாளொன்றுக்கு 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம், 110 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீட்டை ஈர்க்கும்வகையில், சென்னைக்கு அருகாமையில் சிப்காட் மாநல்லூர் தொழிற்பூங்காவில் மின்சார வாகனப் பூங்கா ஒன்று 148 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இத்தொழிற்பூங்கா அனைத்து அடிப்படை வசதிகளுடனும், மின்சார வாகன உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஆய்வு மையம், சோதனை மையம், கிடங்கு வசதி, கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

சிப்காட் நிறுவனம் புதிதாக அமைக்கவுள்ள மாநல்லூர், செய்யாறு, மணப்பாறை, தேனி, மணக்குடி, சக்கரக்கோட்டை ஆகிய தொழிற்பூங்காக்களில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் வேளாண்மை ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி நிதி உதவியுடன் 2,934 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

வணிகம் மற்றும் நிறுவன தகவல்களைச் சேமித்தல், மீட்டெடுத்தல், தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகளைச் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்கள் அமையும் வகையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள நெமிலி, மன்னூர் கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தரவு மைய பூங்கா ஒன்றினை சிட்கோ உருவாக்கும்.

இப்பூங்காவில் செயல்பாட்டுக்கு வரும் தொழில் நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். நவீன யுகத்தின் பெரும் சொத்தாகக் கருதப்படும் தகவல் தரவுகளுக்கான தொழிற்பூங்கா தமிழ்நாட்டில் அமைக்கப்படுவதன் மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு மேலும் முன்னேற்றம் அடைந்திடும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்று இரவு மீண்டும் உரையாற்றும் மோடி - முக்கிய உத்தரவுகள் அறிவிப்பு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.