சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டமானது முற்பகல், பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக மாவட்ட வாரியாக நடக்கிறது.
முதல் நாள் முற்பகல் நேரத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் கரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய அதிமுக மாவட்டங்களுக்கும், பிற்பகல் நடக்கும் கூட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர், கிழக்கு மேற்கு, திண்டுக்கல் விருதுநகர் திருச்சி மாநகர் புறநகர் ஆகிய மாவட்டங்களுக்கும் ஆலோசனை நடக்கிறது.
குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் தோல்வி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியை பலப் படுத்துதல், 2021 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல், கட்சி பணி ஆற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசனையை செய்யப்பட உள்ளன.
மேலும், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கக் கூடிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்படலாம் ன்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்வு முறைகேடு - அதிகரிக்கும் கைது எண்ணிக்கை!