தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவிதை வடிவில் 2021இல் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று பேசினார்.
அவர் வாசித்த கவிதை பின்வருமாறு:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆசியோடு களம் நோக்கிச் செல்கிறோம்
வெற்றிக்கு அழகு விவேகம். அதை எங்களுக்கு கற்றுத் தந்தவர் அவர்
கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தத்தில் வெல்வது எப்படி? அதையும் கற்றுத்தந்தவர் அவர் எங்கள் பயணமும் அதை நோக்கித்தான்.
கண் துஞ்சாது பணியாற்றும் கடமையே எங்கள் உயிர்மூச்சு,வெற்றியின் இலக்கே - எங்கள் இலட்சியம்
சதிகளை வெல்லும் சக்தியைக் கொடுத்திருக்கும் அவரின் தயவால், எதிரிகளின் சூழ்ச்சி எங்களிடம் எடுபடாது
எதிரிகள் நம்மை எப்போதும் வென்றதுமில்லை, அவர்களை வீழ்த்தாமல் நாம் எப்போதும் விட்டதுமில்லை
வரப்போகும் 2021 பொதுத்தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி பொன் எழுத்துக்களால் பதிக்கப் போகும் வெற்றி
சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் வெற்றி, நமது வெற்றி
இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.