இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா என்பவர் கடந்த புதன்கிழமை (27.5.2020) அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன்.
பணியின் போது உயிரிழந்த செவிலியர் திருமதி. ஜோன் மேரி பிரிசில்லா அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணிகளில், தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஜோன் மேரி பிரிசில்லாவின் சேவையினை அங்கீகரிக்கும் விதமாக, சிறப்பினமாக, அவருடைய குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் மரணம்