ETV Bharat / state

"பொங்கல் பரிசுடன் கரும்பு, பனை வெல்லம் வழங்கிடுக" - அண்ணாமலை வலியுறுத்தல்! - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

ANNA
ANNA
author img

By

Published : Dec 23, 2022, 9:56 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(டிச.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள 2.16 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,356.67 கோடி ரூபாய் செலவில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்ற செய்தியை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 1,000 ரூபாய் பணம், 1 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்தால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் ஆதார விலையாக வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்த திறனற்ற திமுக, அந்த வாக்குறுதியை மறந்தது மட்டுமல்லாது, பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருப்பது, தேசிய உழவர் தினமான இன்று திமுக, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு. அரசு கொள்முதலை எதிர்நோக்கியிருந்த விவசாயிகளின் நிலையைப் பற்றி திமுகவுக்கு என்ன கவலை? சிவப்பு கம்பளம் விரித்து வயலில் நடந்த கூட்டத்திற்கு, விவசாயிகளின் வலி எப்படி தெரியும்?

ஒரு கிலோ அரிசி 21 ரூபாய்க்கும், ஒரு கிலோ சர்க்கரையை 31 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யும் தமிழக அரசு, வழங்கப்படவிருக்கும் பொங்கல் தொகுப்பில் இந்த பொருட்களின் விலை 76 ரூபாய் என்று கணக்கு காட்டியுள்ளது. இதை பொது மக்களுக்கு விளக்க வேண்டும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும், அவரது புதல்வரும் இப்போது அந்த கோரிக்கையை மறந்துவிட்டார்கள் போல.

கொடுத்த வாக்குறுதிகளை மறந்த இவர்கள், மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை மட்டும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது? பனை வெல்லம் மற்றும் பனை பொருட்களை நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்வோம் என்று அறிவிப்பை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு வருடமாக உறங்கி கொண்டிருக்கிறது, இந்த திறனற்ற திமுக அரசு.

அரசு அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் கோரிக்கை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'பொங்கல் தொகுப்பில் ரூ.5000 ரொக்கம், கரும்பு வழங்கிடுக' - இபிஎஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.