ETV Bharat / state

தமிழ்நாட்டில் மறைகிறதா 'இரட்டை இலை’ மேஜிக்? - திமுக வெற்றி முகம் அதிமுக ஆட்டம் காலி

சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்ற வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது.

dmk, admk
dmk, admk
author img

By

Published : Jan 5, 2020, 5:51 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, ஜனவரி 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. 513 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 5087 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

இதில் அதிமுக 1781 (ஒன்றிய கவுன்சிலர்) இடங்களிலும், 214 (மாவட்ட கவுன்சிலர்) இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர் இடங்களை பொறுத்தமட்டில் அதிமுக 41.55 விழுக்காடு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 47.18 விழுக்காட்டில் வென்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் 34.99 விழுக்காடு அதிமுகவும், 41.26 விழுக்காடு திமுகவும் வென்றுள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தால் 1996 முதல் தொடர்ந்து, 2001, 2006, 2011ஆம் ஆண்டுகளில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. வழக்கமாக, உள்ளாட்சி தேர்தலில், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சியே அதிக அளவில் வெற்றி பெறும். அந்த வகையில், அதிமுக - திமுக மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த, 2011ஆம் ஆண்டு தனித்து போட்டியிட்டு, 70 விழுக்காட்டிற்கு அதிகமான பதவிகளை அதிமுக கைப்பற்றியது.

எந்த ரகசியமா இருந்தாலும் சொல்லிடுங்க
எந்த ரகசியமா இருந்தாலும் சொல்லிடுங்க

இந்நிலையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஆட்சியில் உள்ள கட்சியே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் என்ற பழைய பல்லவியை தூர வீசி ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது திமுக. அதிமுகவிற்கு பெரிதளவில் பெரிதும் கை கொடுக்கும் என நம்பப்பட்ட வட மாவட்டங்களில் திணறிய அதிமுக, டெல்டாவில் முட்டி மோதி முயன்றும் கால் பங்கு அளவுக்கு கூட வெற்றி பெற முடியவில்லை. முதல்வரின் சொந்த தொகுதியான சேலத்திலும் திமுக குறிப்பிடும்படியான இடத்தை பெற்றுள்ளது.

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி அன் கோ வின் சொந்த தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு ஓரளவு கை கொடுத்துள்ளன. கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய கொங்கு 'பெல்ட்'டுகள் வைத்துள்ள அதிமுகவின் வாக்கு வங்கியை திமுக சற்று ஆட்டி பார்த்துவிட்டது. தேனி மாவட்டத்தில் அதிக அளவு வென்று தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். டெல்டா பகுதிகளில் மிகக் குறைவான அளவே அதிமுக வென்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

திருச்சி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் சொற்ப இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இந்த பகுதிகளில்தான் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களை அதிமுக இழந்துள்ளது. இதற்கும் மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் வீதம் அங்கு இருந்தும் டெல்டா மக்கள் அதிமுகவுக்கு 'டாடா' காட்டிவிட்டனர். அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் அமைச்சர் விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை பகுதியை திமுக 'அல்வா' மாதிரி தூக்கி சாப்பிட்டுவிட்டது.

மேலும், தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஆளுங்கட்சியின் 'பாட்ஸா' பலிக்கவில்லை என்றே சொல்லலாம். கிராமங்கள்தான் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் முதுகெலும்பு. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை இந்த பெயர்கள் போதும், அதிமுக எளிதில் வெற்றிபெற்று விடும். தற்போது நடந்து முடிந்த தேர்தல் எம்ஜிஆர் கிரேஸ், ஜெயலலிதா மாஸ் ஆகியவற்றை 'டம்மி' ஆக்கி 'இரட்டை இலை'யை உதிர செய்துள்ளது.

ஜெயலலிதாவை கொண்டாடும் அதிமுகவினர்
ஜெயலலிதாவை கொண்டாடும் அதிமுகவினர்

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்துள்ள இந்தத் தேர்தல், வரலாற்று பக்கங்களில் ஆளுங்கட்சியின் வெற்றியை மாற்றி எழுதியுள்ளது.

Intro:Body:சென்னை// வி.டி. விஜய் //அதிமுக// சிறப்பு செய்தி

மறைகிறதா 'இரட்டை இலை மேஜிக்?

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மூலம், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்ற வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. முதற்கட்டமாக ஊரக பகுதிகளுக்கு மட்டும் நடந்துள்ள இந்த தேர்தல் மக்களிடையே அரசியல் கட்சிகளின் எண்ண ஓட்டத்தை வெளி கொண்டு வந்துள்ளது.

தமிழகதில் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவி இடங்களுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. 513 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 5087 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் அதிமுக 1781 (ஒன்றிய கவுன்சிலர்) இடங்களிலும், 214 (மாவட்ட கவுன்சிலர்) இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர் இடங்களை பொறுத்தமட்டில் அதிமுக 41.55 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 47.18 சதவீதத்தில் வென்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் 34.99 சதவீதம் அதிமுகவும், 41.26 சதவீதம் திமுகவும் வென்றுள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தால் 1996 முதல் தொடர்ந்து, 2001, 2006, 2011ம் ஆண்டுகளில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. வழக்கமாக, உள்ளாட்சி தேர்தலில், எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்த கட்சி அதிக அளவில் வெற்றி பெறும். அந்த வகையில், அதிமுக - திமுக மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த, 2011ல் தனித்து போட்டியிட்டு, 70 சதவீதத்திற்கும் அதிகமான பதவிகளை அதிமுக கைப்பற்றியது.

இந்நிலையில் 2019 உள்ளாட்சி தேர்தல், ஆட்சியில் உள்ள கட்சியே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெரும் என்ற பழைய பல்லவியை தூர வீசி ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான திமுக அதிக அளவில் உள்ளாட்சி இடங்களை பிடித்து உள்ளது.

இதில், அதிமுகவுக்கு பெரிதும் கை கொடுக்கும், வட மாவட்டங்களில் திணறிய அதிமுக, டெல்டாவில் முட்டி மோதி முயன்றும் கால் பங்கு அளவுக்கு கூட வெற்றி பெற முடியவில்லை. முதல்வரின் சொந்த தொகுதியான சேலத்திலும் திமுக குறிப்பிடும்படியான இடத்தை பெற்றுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி அன் கோ வின் சொந்த தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு ஓரளவு கை கொடுத்துள்ளன. கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய கொங்கு 'பெல்ட்'டுகள் வைத்துள்ள அதிமுகவின் வாக்கு வங்கியை திமுக சற்று ஆட்டி பார்த்து விட்டது. தேனி மாவட்டத்தில் அதிக அளவு வென்று தனது செல்வாக்கை நிலைநிறுத்தி உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்.

ஆனால் டெல்டா பகுதிகளில் மிக குறைவான அளவே அதிமுக வென்றுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் சொற்ப இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இந்த பகுதிகளில் தான் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை அதிமுக இழந்துள்ளது. இதற்கும் மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் வீதம் அங்கு இருந்தும் டெல்டா மக்கள் அதிமுகவுக்கு 'டாடா' காட்டி விட்டனர். இதில் அதிமுகவின் முக்கிய புள்ளி சுகாதார துறை விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை பகுதி வாக்குகளை திமுக 'அல்வா' மாதிரி தூக்கி சாப்பிட்டு விட்டது. மேலும், தென் தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஆளுங்கட்சியின் 'பாட்ஸா' பலிக்கவில்லை என்றே சொல்லலாம்.

கிராமங்கள்தான் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் முதுகெலும்பு. எம்ஜிஆர், அம்மா (ஜெயலலிதா), இரட்டை இலை இந்த பெயர்கள் போதும், அதிமுக எளிதில் வெற்றி பெற்று விடும். ஆனால் நடந்து முடிந்த தேர்தல் எம்ஜிஆர் கிரேஸ், ஜெயலலிதா மாஸ் ஆகியவற்றை 'டம்மி' ஆக்கி 'இரட்டை இலை'யை உதிர செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்துள்ள இந்த தேர்தல், வரலாற்று பக்கங்களில் ஆளுங்கட்சியின் வெற்றியை மாற்றி எழுதி உள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.