சென்னை: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரையிலும் , 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வரும் 9ஆம் தேதி செய்முறைத்தேர்வு நடைபெறவுள்ளது.
எந்த பிரச்சினையுமின்றி பொதுத்தேர்வை சுமூகமாக நடத்தும் வகையில், பள்ளிக் கல்வித்துறை ஆணையர், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் மாவட்ட அளவில் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டங்களுக்கு சென்று தேர்வில் எவ்வித குளறுபடியும் ஏற்படாமல் சரியான முறையில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும், பொதுத்தேர்வு தொடர்பான பணிகளை மேற்பார்வை இட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ககர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சென்னை மாவட்டத்திற்கும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் இளம் பகவத் மதுரை மாவட்டத்திற்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி திருப்பூர் மாவட்டத்திற்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீ வெங்கடப்பிரியா செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கத்தின் இயக்குனர் நாகராஜன் முருகன் திண்டுக்கல் மாவட்டத்திற்கும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட இயக்குனர் குப்புசாமி திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் லதா விழுப்புரம் மாவட்டத்திற்கும், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி திருச்சி மாவட்டத்திற்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் செயலாளர் கண்ணப்பன் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் பழனிச்சாமி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா வேலூர் மாவட்டத்திற்கும், ஆசிரியர் தேர்வு உறுப்பினர் உஷாராணி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குனர் ராமேஸ்வரம் முருகன் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குனர் உமா கடலூர் மாவட்டத்திற்கும், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் சுகன்யா அரியலூர் மாவட்டத்திற்கும், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் பொன்னையா ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி தேனி மாவட்டத்திற்கும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் நரேஷ் கரூர் மாவட்டத்திற்கும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் இடைநிலைகல்வி கோபிதாஸ் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தொழிற்கல்வி ஜெயக்குமார் நாமக்கல் மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமி திருநெல்வேலி மாவட்டத்திற்கும், தொடக்க கல்வி துறையின் இணை இயக்குனர் சாந்தி சேலம் மாவட்டத்திற்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் பாடத்திட்டம் ஸ்ரீதேவி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் குமார் சிவகங்கை மாவட்டத்திற்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இணை இயக்குனர் ராஜேந்திரன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குனர் சசிகலா தென்காசி மாவட்டத்திற்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குனர் ஆனந்தி புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் செல்வகுமார் விருதுநகர் மாவட்டத்திற்கும், அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் மேல்நிலை செல்வராஜ் ஈரோடு மாவட்டத்திற்கும், கள்ளர் சீரமைப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் இணை இயக்குனர் பி.குமார் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டங்களில் தேர்வுகளை பிரச்சனை இன்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதனை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.