ETV Bharat / state

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் - admk interim presidium chairperson tamilmagan hussain

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

tamilmagan hussain appointed as interim leader of aiadmk  interim leader of aiadmk  tamilmagan hussain  chennai news  admk Executive Committee Meeting  அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர்  அதிமுக செயற்குழு கூட்டம்  தமிழ்மகன் உசேன்  அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்
தமிழ்மகன் உசேன்
author img

By

Published : Dec 1, 2021, 11:54 AM IST

சென்னை: ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர். 1) காலை 10 மணிக்கு அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என 300 நபர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு தற்காலிக அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.