ETV Bharat / state

நாடாளுமன்ற விவாதத்தை முடக்குவதால் மக்களுக்கு வேண்டியதை பேச முடியாமல் போகும் - தமிழிசை சௌந்தரராஜன் - அமித்ஷா

நாடாளுமன்றம் என்பது விவாதங்களுக்குடையது, ஆனால் அதை முடக்குவதால் மக்களுக்கு வேண்டிய பலவற்றை பேச முடியாமல் போகும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Telangana Governor Tamilisai Soundararajan
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
author img

By

Published : Jul 29, 2023, 2:17 PM IST

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சென்னை: அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12வது மாணவர் தலைமை ஏற்பு விழா 2023இல் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு தலைமை பொறுப்பேற்றார். அதன் பின்னர் மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பதவி ஏற்பு செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டு களித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், "உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டு வருகை வரவேற்கத்தக்கது. அவர் தமிழ்நாடு வருவது அரசியல் ரீதியான வருகை அல்ல. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்திற்குச் சென்று நூல் வெளியிட்டு உள்ளார். அப்துல் கலாம் இல்லத்திற்கு நமது உள்துறை அமைச்சர் செல்வது நமக்கு பெருமை.

அப்துல் கலாம் இரண்டாவது முறை நம் நாட்டிற்கு குடியரசுத் தலைவராக வந்திருக்க வேண்டும். ஆனால், சில அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக அவர் மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வர முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் காரணத்தால், தமிழர்கள் அவருக்கு ஆதரிக்காததால் மீண்டும் அவர் குடியரசுத் தலைவராக முடியவில்லை என்பதை மறுக்க முடியாது.

தமிழ்நாடு எல்லா விதத்திலும் முன்னேற வேண்டும். பாரத தேசம் எல்லா விதத்திலும் முன்னேற வேண்டும் என்பதுதான் அனைவரது கனவாக இருக்க முடியும். அதைத்தான் அப்துல் கலாம், தூங்கும்போது வருவது கனவு அல்ல, உங்களை தூங்க விடாமல் இருப்பதுதான் கனவு என்று கூறினார்.

பலரை, பல விஷயங்கள் தூங்க விடாமல் இருக்கிறது. நமது கொள்கைகளும், நாம் எட்ட வேண்டிய உயரங்களும், தாண்ட வேண்டிய தடைகளும்தான் நம்மை தூங்க விடாமல் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு இளைஞர்கள் இருக்க வேண்டும் என்பதுதான் அப்துல் கலாமின் கனவு.

நாடாளுமன்ற விவாதம் என்பதற்கு நான் ஆளுநராக இருப்பதால் அரசியல் கருத்துச் சொல்ல முடியாது. ஆனால், சாதாரன குடிமகளாக நான் கூறுவது, நாடாளுமன்றத்தில் நமக்கு வேண்டிய விவாதம் நடைபெற வேண்டும். மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது விவாதங்களுக்கு உடையது. அதை முடக்குவதால் மக்களுக்கு வேண்டிய பலவற்றை பேச முடியாமல் போகும் என்பது ஒரு பொதுநலவாதியாக எனது கருத்து" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரத்தில் ‘மியான்மர்’.. உண்மை நிலவரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.