ETV Bharat / state

தமிழ்நாட்டின் அடுத்த பாஜக தலைவர் யார்? மனம் திறந்த தமிழிசை - தமிழிசை செளந்தர்ராஜன்

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார்.

Tamilisai
author img

By

Published : Jun 6, 2019, 5:37 PM IST

தமிழ்நாடு மேலிடப்பொறுப்பாளர் முரளிதர ராவ் தலைமையில் சென்னை பாஜக அலுவலகத்தில் மாநில மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு முடிவுகளால் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டார். நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவ சேர்க்கைக்கான இடங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வில் உள்ள நல்ல விஷயங்கள் குறித்து பேசாமல் எதிர்க்கட்சிகள் மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைப்பதாக குற்றம்சாட்டிய தமிழிசை, நீட் தேர்வை எப்படி ஸ்டாலின் நீக்குவார்? என கேள்வி எழுப்பினார்.

கஸ்தூரி ரங்கன் பரிந்துரையில் மும்மொழிக் கொள்கையில் மூன்றாம் மொழி குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது என தெளிவுபடுத்திய தமிழிசை, இது கணினி காலம் என்பதால் மாணவர்களின் நலனுக்காகவே மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

சென்னை

விருப்பமான மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதலமைச்சர் பழனிசாமி பதிவிட்ட டிவீட் எதிர்க்கட்களின் தவறான பரப்புரையால் நீக்கப்பட்டிருப்பதாகவும் தமிழிசை கூறினார். ஒரு ஓவியர் தேசியக்கொடி வடிவில் பாரதியார் படம் வரைந்தால் அதையும் காவி நிறம் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதாக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல், வேலூர் மக்களவைத் தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு, எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என தமிழிசை பதிலளித்தார். மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருத்து தேர்வாகப்போவது யார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழிசை பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தமிழ்நாட்டில் அடுத்த பாஜக தலைவர் யார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போது வரை நான்தான் (தமிழிசை) தலைவர் என்றார்.

*நீட் தேர்வை நீக்குவேன் என்கிறார் ஸ்டாலின் எப்படி நீக்குவார் ? ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி*

சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது  தமிழகத்திற்கான மேலிடப்பொருப்காளர் முரலளிதர்ராவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட இணைப்பொறுப்பாளர் சி.டி.ரவி, எச்.ராஜா, வானதிசீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தேர்தல் தோல்விகள் குறித்தும் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கட்சியை வலுப்படுத்துவது  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் பாஜக 18 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இதில் 13 கோட்டங்களுக்கு தமிழக பாஜக தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  கட்சியை வழுபடுத்தவும், பிரமரின் திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்.

நீட் தேர்வு முடிவுகளால் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் வருத்தத்தை தெரிவித்தார். தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்கட்சிகள் எதிர்மறையான அரசிலை செய்கிறது. மருத்துவ சேர்கைக்கான இடங்கள் அதிகரித்துள்ளன,  தேசிய அளவில் 57வது இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது. நீட் தேர்வில் உள்ள நல்ல விஷயங்கள் குறித்து பேசாமல் எதிர்கட்சிகள் மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைப்பதாக குற்றம் சாட்டினார். ஸ்டாலின் நீட் தேர்வை எப்டி நீக்குவார் என அவர் கேள்வி எழுப்பினார் 

கஸ்தூரி ரங்கன் பரிந்துரையில் 3ம்மொழிக் கொள்கையில் மூன்றாம் மொழி குறித்து அந்த அந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்  என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை 25ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இது கம்புயூட்டர் காலம் மாணவர்களின் நலனுக்காகவே மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டது  எனவும் அதிலும் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மொழிப் பரிமாற்றம் விருப்பமான மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்ற நல் எண்ணத்தில் முதல்வர் பதிவிட்ட டிவிட் எதிர்கட்களின் தவறான பரப்புரையால் நீக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒரு ஓவியர் தேசிய கொடி வடிவில் பாரதியார் படம் வரைந்தால் அதையும் காவி நிறம் என விமர்சனம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். 
நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கும், மாநிலங்கள் அவைக்கு தமிழகத்தில் இருத்து தேர்வாகப்போவது யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கும் அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் தற்போது வரை நான்நான் தலைவர் என்றார் 

அவரை தொடர்ந்து பேசிய  தமிழக தேர்தல் இணைப் பொருப்பாளர் சிடி.ரவி

தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தமிழத்தில் எதிர்மறை அரசியல் வென்றிருக்கிறது.  பிரதமர் மோடி மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு முக்கியதுவம் கொடுத்தார். இந்த தேர்தலில் தோற்றிருக்கலாம் ஆனால் நம்பிக்கையை இழக்கவில்லை நிச்சயம் ஒருநாள் வெல்வோம் என்றார்.. 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.