ETV Bharat / state

தமிழ் இலக்கிய திறனறித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு! - அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம்

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது.

Tamil
Tamil
author img

By

Published : Oct 6, 2022, 6:24 PM IST

சென்னை: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 483 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை எழுதுவதற்கு 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களுக்கான ஹால் டிக்கெட்டை நாளை(அக்.7) முதல், பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறவுள்ளது. 750 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்தும், 750 மாணவர்கள் இதரப் பள்ளிகளில் இருந்தும், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த திறனறித் தேர்வில் தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் திட்டங்களின் நிலையை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.