ETV Bharat / state

இந்தி சர்ச்சை: சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்

சென்னை: விமான நிலையத்தில் முக்கிய சோதனை பகுதிகளில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்களை நியமித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்
author img

By

Published : Aug 12, 2020, 2:34 PM IST

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி டெல்லிக்கு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை பகுதியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் காவலர் ஒருவர், இந்தியில் கேள்வி கேட்டார். அப்போது கனிமொழி தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேட்குமாறு கூறினார்.

இதையடுத்து அந்த காவலர், ‘இந்தி தெரியாமல் இந்தியரா’ எனக் கேட்டதாக டுவிட்டரில் கனிமொழி பதிவிட்டு இருந்தார். இதனால் பெரும் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இது போல் தனக்கும் நடந்ததாக ட்வீட் செய்தார்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த அந்த காவலரிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் டிக்கெட், பாதுகாப்பு மற்றும் சோதனை செய்யும் இடங்களில் தமிழ் தெரிந்த 25க்கும் மேற்பட்ட காவலர்களை நியமித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமன நடவடிக்கை!

இதன் முலம் மொழியால் எவ்வித சர்ச்சைகளும், இடையூறும் ஏற்படாது என அலுவலர்கள் தெரிவித்தனர். தமிழ் தெரிந்த காவலர்கள் நியமிக்கப்பட்டதற்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க:இந்தி தெரியாது என்றால் இந்தியர் இல்லை என்பீர்களா ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.