ETV Bharat / state

‘மலேசியாவில் இருப்பவர்களை மீட்கலாம்; மகாராஷ்டிரா முடியாதா?’ - உயர் நீதிமன்றம் கேள்வி - Tamil people’s stuck in maharastra

சென்னை: மலேசியாவில் இருப்பவர்களை மீட்கும் போது மகாராஷ்டிராவில் சிக்கியிருப்பவர்களை மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்
author img

By

Published : May 12, 2020, 7:56 PM IST

Updated : May 12, 2020, 8:39 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள சங்லி மாவட்டத்தில் குப்வாட் என்ற கிராமத்தில் கணேசன் என்பவர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருப்பதாகவும், தமிழக அரசு அவர்களை மீட்க வேண்டும் என்றும் செய்தி வெளியாகியிருந்தது.

இச்செய்திகளை அடிப்படையாக வைத்து, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “மகாராஷ்டிராவில் சிக்கியிருப்பவர்கள் தமிழகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் அனைவரும் தலா மூன்று ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டுமென மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

கடுமையான வெயில் காலத்தையும் பொருட்படுத்தாமல், மனிதாபிமானமற்ற முறையில் ஏழை தமிழர்களை அடைத்து வைத்திருப்பது அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்னமும் மகாராஷ்டிராவில் சிக்கி இருக்கும் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் மீட்கப்படவில்லை என வாதிட்டார்.

பின்னர் அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், மகாராஷ்டிராவில் இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், மலேசியாவில் இருப்பவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும் போது மகாராஷ்டிராவில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது என அரசுக்கு கேள்வி எழுப்பி, இந்த வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபி, மகாராஷ்டிரா காவல் துறை ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Last Updated : May 12, 2020, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.