ETV Bharat / state

தொழிலதிபரிடம் இருந்து செல்ஃபோன் திருடிய நபர் கைது.. - chennai

சென்னை: தியாகராயநகரில் நடைபயிற்சி மேற்கொண்ட தொழிலதிபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்ஃபோனை திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொழிலதிபரிடம் இருந்து செல்போன் பறித்த நபர் கைது..
author img

By

Published : Aug 12, 2019, 6:48 PM IST

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் சேஷாத்திரி நாதன். இவர் இறக்குமதி தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று காலை 8 மணி அளவில் தியாகராய நகர் கோட்ஸ் ரோடு பகுதியில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து‌ வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்ஃபோனை பறித்து சென்றார்.

இதுகுறித்து, பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் போலியானது என்றும், அது அமைந்தகரையைச் சேர்ந்த பாஷா என்பதும் தெரியவந்தது.

தொழிலதிபரிடம் இருந்து செல்போன் பறித்த நபர் கைது..

இதனைத் தொடர்ந்து, தனிப்படை காவல் துறையினர் பாஷாவை கைது செய்தனர். விசாரணையில், செல்ஃபோனை பாண்டி பஜாரில் உள்ள ஒரு செல்போன் கடையில் விற்றதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, திருட்டு செல்போனை வாங்கியதற்காக கடையின் உரிமையாளரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த 20க்கும் மேற்பட்ட திருட்டு செல்ஃபோன்களையும் பறிமுதல் செய்தனர்.

Intro:Body:நடைப்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது தொழிலதிபரிடம் இருந்து செல்போன் பறித்த நபர் கைது..

சென்னை தியாகராயநகரில் கிரி சாலையில் வசித்து வருபவர் சேஷாத்திரி நாதன் . இவர் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர் ஆவார். நேற்று காலை 8 மணி அளவில் தியாகராய நகர் கோட்ஸ் ரோடு பகுதியில் நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்த போது திடீரென்று பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து‌ வந்த மர்ம நபர் ஒருவர் சேஷாத்ரிநாதிடம் இருந்து செல்போனை திடீரென பறித்து சென்றுள்ளனர். பின்னர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து தி நகர் சிறப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து மேற்கொண்ட போது அது போலியான பதிவு எண் என தெரியவந்தது.

தொடர்ந்து சிசி டிவியை வைத்து கண்காணிக்க போது அது அமைந்தகரையில் உள்ள‌ஒரு இடத்தை காண்பித்திருக்கிறது. இதனை தொடர்ந்து
அங்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனம் இருப்பதை கண்டுபிடித்தனர். விசாரித்தபோது
பாஷா என்பவர் பதுங்கி இருந்த அவரை சுற்றிவளைத்து பிடித்தபோது சிசிடிவியில் அவர் அணிந்திருந்த அதே உடையுடன் இருந்துள்ளார்.

மேலும் விசாரணையின் போது காலையில் பறித்த அந்த செல்போனை பாண்டி பஜாரில் உள்ள ஒரு செல்போன் கடையில் விற்று இருப்பதாக தெரிவித்திருக்கிறார்

தனிப்படை போலீசார்அந்த கடையில் இருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதே போன்று திருட்டு செல்போனை வாங்கியதாக அந்தக் கடையின் உரிமையாளரையும் குற்றவாளியாக சேர்த்து சுமார் 20க்கும் மேற்பட்ட செல்போன்களை பாண்டி பஜார் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.