நியூ இந்தியன் எஃக்ஸ்பிரஸ், இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (FICCI) இணைந்து நடத்திய ரியல் எஸ்டேட் விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, ரியல் எஸ்டேட் துறையில் சிறந்து விளங்கிய 8 நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை நிலவினாலும் சென்னை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாடு வெறும் ஒரு துறையை மட்டும் சார்ந்து இல்லாமல் பல்வேறு துறைகளில் பரந்து விரிந்து இருப்பதால் இந்த தற்காலிக மந்த நிலையிலிருந்து மீண்டு வரும்.
தமிழ்நாடு வீட்டு வசதித் துறை முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ராஜேஷ் லக்கானி, 25 ஆயிரம் சதுர அடிக்கு கீழ் உள்ள திட்டங்களுக்கு முழுக்க முழுக்க இணையதளம் மூலமே அனுமதி அளிக்கும் நடைமுறை நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில நாட்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்றார்.