சென்னை: வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 16) முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இன்றும் (ஏப்ரல் 16), நாளையும் (ஏப்ரல் 17) அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.