ETV Bharat / state

கால்நடை மருத்துவம் படிப்புக்கான 760 இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப்படிப்பில் சேர வரும் 12ஆம் தேதி விண்ணப்பக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாதவகையில் நடப்பாண்டில், 760 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 9, 2023, 7:34 PM IST

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (UG admission 2023 in Tamil Nadu Veterinary and Animal Sciences University) கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பி.டெக்., தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இணையதளம் மூலம் 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையில் மாணவர்கள் https://adm.tanuvas.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.

மேலும், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் நடப்பாண்டில் தேனி வீரப்பாண்டி , உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரியில் தலா 40 இடங்கள் என 80 இடங்கள் கூடுதலாக அனுமதிப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை இடங்கள் 660 என உயர்ந்துள்ளது.

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர 12ஆம் தேதி விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்குழு (இளநிலைப் பட்டப்படிப்பு) தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 உள்ளது.

நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்: உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பி.டெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்)40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளது. இந்த இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். இதற்கு மாணவர்கள் நீட் தேர்வில் (NEET Exam) பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வழிகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்தப் பின்னர் மாணவர்கள் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பத்தேவையில்லை' எனவும் அதில் கூறியுள்ளார். விண்ணப்பம் செய்யும் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் தேதி மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: "மதுவை ஒழிக்காமல் போதைப்பொருளை எப்படி ஒழிக்க முடியும்" ஏடிஜிபி சங்கர் முன்பு மாணவர் வேதனை பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.