சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி இன்று (ஜன.26) மாலை 6.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நேற்று (ஜன.25) உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், இன்று மாலை உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: இந்திய விமானப் படையின் சாகசத்தை வெளிப்படுத்தும் 'காக்பிட் காட்சி'... விமானப்படை வெளியிட்ட வீடியோ...