சென்னை : இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழ்நாடெங்கும் பதிவெண் பலகையில் (Number Plate) " G " அல்லது "அ" என்ற எழுத்துக்கள் எழுதப்பட்டும் அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டும் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (K)இன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே . அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது. எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே “G” அல்லது “அ” என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவே, தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் “G” அல்லது “அ” என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மதுரை ஜிகர்தண்டா.. 600 ஆண்டு கால வரலாறும், வாழ்வியலும்!