சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர வசதியாக முக்கிய நகரங்களில் இருந்து 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2023 பொங்கல் திருநாளை முன்னிட்டு , சென்னையில் 5 சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து ஜனவரி 12 முதல் 18 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஜன. 12 - 18 வரை சென்னையில் இருந்து 10,749 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல பிற ஊர்களில் இருந்து 6,183 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து மீண்டும் பணி மற்றும் கல்வி நிலையங்கள் ஆகியவற்றிற்கு சிரமமின்றி திரும்ப ஏதுவாக 16,709 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Sathuragiri Hills: சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி.. நிபந்தனைகள் என்ன?