ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 17,934 பேருக்கு கரோனா பாதிப்பு - corona cases in tn

தமிழ்நாட்டில் புதிதாக இன்று (ஜனவரி 12) 17 ஆயிரத்து 934 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jan 12, 2022, 9:33 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக இன்று (ஜனவரி 12) 17 ஆயிரத்து 934 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையிலே 7,372 பேருக்கும், செங்கல்பட்டில் 1,840 நபர்களுக்கும் திருவள்ளூரில் 931 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 981 நபர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள குறிப்பில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 935 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 17 ஆயிரத்து 898 நபர்களுக்கும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 36 நபர்கள் என 17 ஆயிரத்து 934 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே 80 லட்சத்து ஒன்பதாயிரத்து 172 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 28 லட்சத்து 47 ஆயிரத்து 589 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர் என்பது தெரியவந்தது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 88 ஆயிரத்து 959 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 21 ஆயிரத்து 725 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் ஏழு நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 12 நோயாளிகளும் என 19 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 905 என உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக ஏழாயிரத்து 372 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 359 என உயர்ந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 840 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் புதிதாக 931 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 262 எனக் கிடுகிடுவென உயர்ந்தது.

பரிசோதனை செய்பவர்களில் நோய்த்தொற்றுப் பரவல் விகிதம் தமிழ்நாட்டில் 11.3 எனச் சராசரியாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் 21.3 விழுக்காடு, செங்கல்பட்டில் 20.9 விழுக்காடு, திருவள்ளூரில் 16.4 விழுக்காடு, காஞ்சிபுரத்தில் 11.4 விழுக்காடு, ராணிப்பேட்டையில் 13 விழுக்காடு என அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கையில் மூன்றாயிரத்து 118 நபர்களும், ஆக்சிஜன் இல்லாத சாதாரண படுக்கையில் மூன்றாயிரத்து 416 நபர்களும், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கையில் 622 நபர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் தனிமைப்படுத்தும் மையங்களிலும் சென்னையில் 304 நபர்கள், கோயம்புத்தூரில் 137 நபர்கள் என 738 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Corona Update: இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.