சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பரப்புரை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்தல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் ( தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர ) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் பிப்.19 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
![தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14441278_p.jpg)
அரசியல் கட்சிகளிடமிருந்து வேட்பாளரின் தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்தல் தொடர்பாகக் கோரிக்கைகள் வந்துள்ளதை தொடர்ந்து,
இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டப்பேரவை தேர்தலின் போது கூறப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களால், தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், Covid - 19 நடைமுறைகளை பின்பற்றிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தலின்போது பேரவைக்கும் தேர்தல் - ஓபிஎஸ் ஆருடம்