சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடந்தது. அதன்பின் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே மாணவர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடினர்.
இந்த விடுமுறை நேற்றுடன் (ஜனவரி 1) முடிந்த நிலையில் இன்று (ஜனவரி 2) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் காலை முதலே வகுப்புகளுக்கு செல்ல தயாராகிவருகின்றனர். அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் ஜனவரி 2,3,4ஆம் தேதிகளில் நடப்பதால் 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: CBSE: 10,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு