ETV Bharat / state

தேசிய அளவிலான விளையாட்டுகளில் தமிழ் மாணவர்களின் வாய்ப்பு பறிபோகுகிறதா? அதிர்ச்சி தரும் தகவல்கள்.. - தமிழ் மாணவர்களின் வாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுகளில் பங்கேற்காமல் உயர்கல்வியில் சேர சிறப்பு மதிப்பெண்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

tamil nadu school students
தமிழக பள்ளி மாணவர்கள்
author img

By

Published : Jun 8, 2023, 10:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெறும் மாணவர்களுக்குப் பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் அதிகபட்சமாக 505 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடத்தப்படுகிறது. ஒட்டப்பந்தயம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், கூடைப்பந்து, டென்னிஸ், வாலிபால், நீச்சல், கேரம், சதுரங்கம், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, கபடி, துப்பாக்கிச் சூடுதல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மாநில அளவிலான போட்டிகளில் தகுதிபெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

விளையாட்டு துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கான வாய்ப்புகள்: அதில், அவர்கள் பெறும் பதக்கங்களின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு உயர்கல்வி படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கப்படும் இடங்களில் சேர்க்கப்படுவர். அதாவது, தங்கப்பதக்கம் வென்றால் 190 மதிப்பெண், வெள்ளிப்பதக்கம் வென்றால் 160 மதிப்பெண், வெண்கலப்பதக்கம் வென்றால் 130 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டாலே 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப தேசிய விளையாட்டு கூட்டமைப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பும். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் முதன்மை உடற்கல்வி இயக்குனர் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அதற்கானப் பட்டியலை அனுப்பி வைப்பார்.

விளையாட்டுப் பிரிவில் 247 மாணவர்கள்: இந்த வகையில், இந்த ஆண்டு 247 மாணவர்களை தேர்வு செய்து மே 29ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான கடிதம் கடந்த மே 11ஆம் தேதி லக்னோவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தப்போது, பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது குறித்த கடிதம் முறையாக சென்று சேரவில்லை என்றும் தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முறையாக நிதி இல்லையா?: அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் (National level school sports competition) பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு அதற்கான நிதி, முறையாக ஒதுக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி படிப்புகளில் சேரும்போது, கூடுதலாக மதிப்பெண்கள் விளையாட்டு பிரிவு தரவரிசையின் போது, வழங்கப்படும். தற்போது, இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காத சூழல் காரணமாக விளையாட்டு பிரிவில் மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பினை இழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெரியதுரை, மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் கூறும்போது, 'அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (School Games Federation of India - SGFI) சார்பாக ஜீன் 5 ஆம் தேதி முதல் டெல்லியில் தேசிய அளவிலான 10 விளையாட்டுகள் நடைபெறுகிறது. அப்போட்டியில் கலந்துகொள்ள தமிழ்நாடு அணி தேர்வு சம்பந்தமாக எந்த அறிவிப்பும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அறிவிப்பு தரப்படவில்லை. புதுச்சேரியில் அணி தேர்வு செய்து தேசிய போட்டியில் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் தேசிய போட்டியில் கலந்துகொள்ள வழி தெரியாமல், ஏமாற்றத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முறையாக கடிதம் வரவில்லையா?: தமிழ்நாடு அணி கடந்த காலங்களில பல பதக்கங்களை பெற்று சாதித்துள்ளதாகவும், பல வீரர்கள் மற்றும் பெற்றோர் எங்களை தொடர்புகொண்டு, சங்கம் சார்பாக முயற்சி செய்து விளையாட அனுமதி வாங்கி தர கூறி கோரிக்கைகள் எழுந்ததாகவும் கூறினர். மேலும், விளையாட்டு வீரர்கள் பாதிப்பை சரி செய்ய வேண்டி நேற்றும், இன்றும் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் ஆண் மற்றும் பெண் அவர்கள் இரண்டு பேரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர்கள் முறையாக எந்த கடிதமும் எங்களுக்கு வரவில்லை என்று கூறினார்கள். மேலும், பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்வி இணை இயக்குநரை கல்வி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் உடனடியாக விசாரித்து, மாணவர்கள் விளையாட நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும், கடைசி நேரமாக இருப்பதால், தமிழ்நாடு அணி தேர்வு செய்யவும், டிக்கெட் புக் செய்யவும் காலம் குறைவாக இருப்பதாக கூறினார். அதற்கு, நான் கடந்த BDG & RDG & RDS முதல் இரண்டு இடம் பிடித்தவர்கள் விவரம் நம்மிடம் உள்ளதாகவும், அவர்களை தேர்வு செய்து தக்கல் டிக்கெட் புக் செய்து போகலாம் என கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இப்போட்டி சார்பாக பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநில SGFI உறுப்பினர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

அதன் பின் தமிழ்நாட்டிற்கு அழைப்பு கடிதம் சென்னை டென்னிஸ் விளையாட்டு அரங்க அலுவலர் நாக ரத்தினத்திற்கு வந்துள்ளதை உறுதிபடுத்தியதாகவும், பின்பு அவரிடம் தொலைபேசியில் பேசியதாகவும் கூறினர். அவர் இதற்கு, சுமார் 20 நாட்களுக்கு முன்பு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்திற்கு மெயில் அனுப்பியுள்ளதாகவும், நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவர் திருமாறன் இந்த விவகாரத்தில் உதவி புரிந்தாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: TN Governor: பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த தேதி அறிவிப்பு - ஆளுநர் மாளிகை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.