ETV Bharat / state

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்வு!

சென்னை : அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்த ஆண்டை  ஒப்பிடுகையில்  13 ஆயிரத்து 216 மாணவர்கள் அரசு உதவி பெறும், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில்  கூடுதலாக  சேர்ந்துள்ளனர்.

author img

By

Published : Oct 18, 2019, 3:32 PM IST

Tamil Nadu School education

கடந்த சில ஆண்டுகளாகவே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்த வகையில் அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2018-2019 கல்வியாண்டில் அரசு கல்லூரியில் 92 ஆயிரத்து 943 மாணவர்களும், 2018-19 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 90 ஆயிரத்து 150 மாணவர்களும், 2018-2019 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 20 ஆயிரத்து 692 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

2019-20 நடப்பு கல்வியாண்டில் அரசு கல்லூரியில் 1 லட்சத்து 2ஆயிரத்து 98 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கூடுதலாக 9ஆயிரத்து 955 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 91ஆயிரத்து 459 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 1309 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 22ஆயிரத்து 644 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 1,952 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.

மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து கருத்து விளக்கமளிக்கும் கல்லூரி கல்வி இயக்குநர், ’தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவர்களின் சதவீதம் அதிகம். தற்போது 49 சதவீதமாக தமிழ்நாட்டின் உயர்கல்வி சதவீதத்தை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதும்; மாணவர் சேர்க்கை அதிகரிக்க காரணமாக தெரிவிக்கின்றனர்.

மேலும், தனியார் கல்லூரிகளிலேயே சிறந்த கல்வி கிடைக்கும் என்கிற தோற்றம் மறையத் தொடங்கி, அரசு கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது' என்றார்.

இதையும் படிங்க:

'யாராக இருந்தாலும், வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது' - அமைச்சர் ஜெயக்குமார்

Intro:Body:

அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்வு

சென்னை,   அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.    

கடந்த ஆண்டை  ஒப்பிடுகையில்  13ஆயிரத்து 216 மாணவர்கள் அரசு,அரசு உதவிப்பெறும் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில்  நடப்பு கல்வியாண்டில்  கூடுதலாக  சேர்ந்துள்ளனர்.

உயர்கல்வித்துறையின்  புள்ளிவிவரங்கள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது

கடந்த சில ஆண்டுகளாகவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் ..அந்த வகையில் அரசு கல்லூரிகள்,அரசு உதவிப்பெறும் கல்லூரிகள்,பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2018-2019 கல்வியாண்டில் அரசு கல்லூரியில் 92ஆயிரத்து 943 மாணவர்களும் ,

2018-19 அரசு உதவிபெறும்  கல்லூரிகளில்  90 ஆயிரத்து 150மாணவர்களும், 2018-2019 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில்  20ஆயிரத்து 692 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

2019-202 நடப்பு கல்வியாண்டில் அரசு கல்லூரியில் 1லட்சத்து 2ஆயிரத்து 98 மாணவர்கள்  சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கூடுதலாக 9ஆயிரத்து,955 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

 அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 91ஆயிரத்து 459மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 1309 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்

பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 22ஆயிரத்து 644 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டிணை ஒப்பிடுகையில் 1952 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.

பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைவு, மருத்துவபடிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வினை கொண்டு வந்தது உள்ளிட்ட காரணங்களால் கலை அறிவியல் பாடங்களின் மேல் மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது இதன்காரணமாக பொதுவாகவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்கின்றனர்.

மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து கருத்து விளக்கமளிக்கும்  கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரி,

தமிழகத்தில் 32 மாவட்டங்கள் மற்றும்

 வட்டங்கள் தோறும்  உயர்கல்வித்துறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளது.                 தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுமே இதற்கான காரணம் என்கின்றனர்.

மேலும் நாட்டில்  உயர்கல்வி பயில்பவர்களின்   சதவீதத்தை காட்டிலும் தமிழகத்தின் உயர்கல்வி பயில்பவர்களின் சதவீதம் அதிகம்.                    தற்போது 49சதவீதமாக தமிழகத்தின் உயர்கல்வி சதவிகிதத்தை 50சதவீதத்திற்கு அதிகமாக  உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க காரணமாக தெரிவிக்கின்றனர்.

தனியார் கல்லூரிகளிலேயே  சிறந்த கல்வி கிடைக்கும் என்கிற தோற்றம் மறையத்துவங்கி அரசு கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது..கருதப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.