ETV Bharat / state

COVID-19 Tamil Nadu: தமிழ்நாட்டில் புதிதாக 8,981 பேருக்கு கரோனா - தமிழ்நாட்டில் புதிதாக 8,981 பேருக்கு கரோனா

COVID-19 Tamil Nadu: தமிழ்நாட்டில் புதிதாக 8,981 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jan 7, 2022, 10:09 PM IST

COVID-19 Tamil Nadu: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜனவரி 7) வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 292 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த எட்டாயிரத்து 944 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வந்த ஐந்து நபர்களுக்கும், சிங்கப்பூரிலிருந்து வந்த மூன்று நபர்களுக்கும், அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவருக்கும் என கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிராவிலிருந்து வந்த ஒருவருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த 17 பேருக்கும் பிகாரிலிருந்து வந்த ஐந்து பேருக்கும் அஸ்ஸாமிலிருந்து வந்த இரண்டு பேருக்கும் ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த ஒருவருக்கும் என 37 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே 72 லட்சத்து 98 ஆயிரத்து 712 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 27 லட்சத்து 76 ஆயிரத்து 413 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 30 ஆயிரத்து 817 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் 984 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து எட்டாயிரத்து 763 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் மூன்று நோயாளிகளும் என எட்டு நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 833 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் புதிதாக பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை, ஏற்கனவே வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சென்னையில் புதிதாக 4,531 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 1,039 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 408 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 257 நபர்களுக்கும், வேலூரில் 216 நபர்களுக்கும், திருச்சியில் 184 நபர்களுக்கும், திருவள்ளூரில் 514 நபர்களுக்கும் என 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100-க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை செய்பவர்களில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மாநிலத்தில் அதிக அளவில் உயர்ந்துவருகிறது. இதனால் கரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மூன்றாவது அலையாக உருவாகியுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேபோல் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உயர்ந்துள்ள எண்ணிக்கையினை வெளியிடாமல் உள்ளது.

சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் அவலநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மருத்துவமனைகளில் கூடுதலாகப் படுக்கை அறை அமைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புக்கு டாட்டா: காவல் துறையின் அதிரடி அட்வைஸ்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.