ETV Bharat / state

தமிழகத்தில் 9 நாட்களில் இயல்பை விட 51 சதவீதம் அதிக மழைப்பொழிவு! - தமிழகத்தில் இயல்பை விட அதிகம் மழை

TN Rain update: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழையானது பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் இயல்பை விட 51 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை பொழிவு அதிகம்
தமிழகத்தில் மழை பொழிவு அதிகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 5:40 PM IST

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழையானது பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழகம், மேற்கு தமிழகம், மேற்குதொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்கள், தென்கிழக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் சில உள் மாவட்டங்களில் பருவமழையானது பரவலாக பெய்து வருகிறது.

குறிப்பாக, வடதமிழகத்தில் எதிர்பார்த்த மழை அளவு என்பது இல்லை. குறிப்பாக சென்னையில் இயல்பை விட குறைவாக உள்ளது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு என்பது 19.4 மீ.மீ ஆகும். இதில், அதிகபட்சமாக விருதுநகரில் 49.5 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கீழ்கோத்தகிரி எஸ்டேட் 23 செ.மீ, பில்லூர் அணை மேட்டுப்பாளையம் பகுதியில் 15 செ.மீ, மூலைக்கரைப்பட்டி 14 செ.மீ, நம்பியூர் 12 செ.மீ, அவினாசி 12 செ.மீ, ஆழியார் 11 செ.மீ, TNAU கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம் தலா 10 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.

வத்திராயிருப்பு , தூத்துக்குடி, பவானிசாகர் , விருதுநகர், ராஜபாளையம், அழகரை எஸ்டேட் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கொத்தவாச்சேரி, ஓட்டப்பிடாரம், குன்னூர் PTO, மேலூர், திருப்பூர் PWD, ஆண்டிபட்டி, களியல் பகுதிகளில் தலா 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது

கோயம்புத்தூர்-தெற்கு, ராமநாதபுரம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, இடையப்பட்டி, ராமநாதபுரம் KVK AWS, மேட்டுப்பாளையம், பூதலூர், மாம்பழத்துறையாறு, கடலாடி, களக்காடு பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் கோவை, திருச்சி, மதுரை, சேலம், காரைக்கால், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தேனி, மயிலாடுதுறை, நீலகிரி, சிவகங்கை, கடலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தென்காசி, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், திருபத்தூர், தருமபுரி, அரியலூர் ஆகிய மாவடங்களில் ஒரு சில இடங்களில் 1 செ.மீ முதல் 6 செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவம்பரில் இயல்பை விட அதிகம்: தமிழகத்தில் பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தை ஒப்பிட்டு பார்த்தால், அக்டோபர் மாதத்தில் 98 மி.மீ மழை அளவு பதிவானது. ஆனால் நவம்பர் 1ஆம் தேதி முதல், 9ஆம் தேதி வரை தமிழகத்தில் 107.9 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

ஆனால் இந்த 9 நாட்களில் இயல்பான அளவு என்பது, 71.5 மீ.மீ. இது இயல்பை விட 51 சதவீதம் அதிகம் என்றாலும், வடதமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட 27-35 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது.

மேலும் கோவை, திருச்சி, மதுரை, சேலம், காரைக்கால், கள்ளக்குறிச்சி, தேனி, மயிலாடுதுறை, நீலகிரி, சிவகங்கை, கடலூர், ஈரோடு, தென்காசி, திருபத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இந்த 9 நாட்களில் மழை இயல்பான அளவை விட அதிகமாக பெய்துள்ளது.

ஆனால், அக்டோபர் மாதத்தில் இருந்து இன்றைய தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக பதிவான மழை அளவு 206.4மீ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 243.6 மீ.மீ ஆகும். இது இயல்பை விட 15% குறைவு. ஆனாலும், அக்டோபர் 31ஆம் தேதி 43 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்த நிலையில், கடந்த 8 நாட்களில் 15 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நவம்பர் மாதத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்து வருகிறது என்பது தெளிவாகிறது.

இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை - உயர் நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்ற EGF சிஇஓ அனுராக் சக்சேனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.