ETV Bharat / state

துணை வேந்தர் நியமனத்திற்கான அறிவிப்புகளை திரும்ப பெற்ற ஆளுநர் மாளிகை.. திடீர் மனமாற்றம் ஏன்? - tn cm

TN Governor RN Ravi: பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் தேடுதல் குழுவை நியமனம் செய்ததை ஆளுநர் திரும்ப பெறுகிறார் எனவும், அதேபோல் உயர் கல்வித்துறை அறிவித்த தேடுதல் குழுவையும் அரசு திரும்பப் பெறும் என நம்புவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகைத் தெரிவித்துள்ளது.

துணைவேந்தர் நியமனத்திற்கான அறிவிப்புகளை திரும்ப பெற்ற ஆளுநர் மாளிகை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 5:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்கள் நியமனம் செய்வதில் தமிழ்நாடு அரசிற்கும், ஆளுநருக்கும் இடையே சர்ச்சை நிலவி வந்தது. இந்த நிலையில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து தமிழ்நாடு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரை ஆளுநர் அழைத்து பேச வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநர், பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் உள்ளார். துணைவேந்தர்கள் நியமனத்தில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்து வெளியிடப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு அரசு புதியத் தேடுதல் குழுவை அமைக்கும் போது, நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு உட்பட்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினருடன் குழுவை அரசு அமைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி 2023 செப்டம்பர் 6-ஆம் தேதி பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றிக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவினை அமைத்து அறிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசும், அதன் அதிகாரப்பூர்வ அரசிதழில் சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இந்தக்குழு 3 பேர் கொண்ட பட்டியலை தேர்வுச் செய்து தமிழ்நாடு ஆளுநருக்கு அளிக்கும் எனவும் கூறியிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதுச்சேரி அரசும் தொடர்புடைய சட்ட விதிகளில் திருத்தங்கள் யுஜிசி விதிமுறை 2018 இணங்க தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கொண்டுவர வேண்டும் என்றும், அதில் எந்தவிதமான தாமதமும் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

சட்டத்தின் இந்த தெளிவான விளக்கத்தைக் கருத்தில் கொண்டும், அரசியலமைப்பு உரிமை மற்றும் சட்டபூர்வமான தன்மைக்கு மதிப்பளித்து, முன்னதாக அறிவிக்கப்பட்ட எனது அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. அதேப்போல், தமிழ்நாடு அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெறும் என நம்புவதாகவும், துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவினை அமைக்கவும், அந்தக் குழு துணைவேந்தர் பதவிக்கான நியமனத்திற்கு தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருக்கும் மூன்று நபர்கள் பட்டியலை வழங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் UGC விதிமுறைகள் பொருந்தும். தமிழ்நாடு அரசினை நம்பி துணைவேந்தர் நியமனத்தி்ற்கு வெளியிட்ட அறிவிப்புகளை திரும்பப் பெறப்படுகிறது" என வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் பேருந்துகள் முழுமையாக இயக்கம்.. ஆய்வுக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.