சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக். 17) நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேலும் திருப்பூர், திருப்பத்தூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்; ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் மழை நிலவரம்
18.10.2021: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
19.10.2021: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.10.2021: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்; வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
21.10.2021: டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்; ஏனைய தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்; மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
வானிலை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
பாபநாசம் 27 செ.மீ, பேச்சிப்பாறை 22 செ.மீ, சித்தாறு 20 செ.மீ, பெருஞ்சாணி அணை 11 செ.மீ, மணிமுத்தாறு, சூரலக்கோடு தலா 10 செ.மீ, மேட்டூர், சின்னக்கலர் தலா 9 செ.மீ, சோலையார் 8 செ.மீ, மயிலாடி, அம்பாசமுத்திரம், வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை தலா 7 செ.மீ, ஆய்க்குடி, தென்காசி தலா 6 செ.மீ, நாகர்கோவில், கொட்டாரம், துறையூர், செங்கோட்டா, பூதப்பாண்டி, கோயம்புத்தூர் அவுஸ் தலா 5 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக் கடல்: இன்று (அக்டோபர் 17) குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் மீட வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல்: இன்று (அக்டோபர் 17) தென் கேரள கடலோரப் பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: உச்சத்தில் காய்கறி விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்