தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி எழுத்துத் தேர்வை 2017 செப்டம்பர் 16ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். 2017 நவம்பர் 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பியது. மேலும் இந்த தேர்வில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்றிருந்தனர். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில் 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேர் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவில் 10, 12ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் தொடக்கம்!