ETV Bharat / state

'அல்லேலூயா' என்பது தீவிரவாத சொல் அல்ல - அமைச்சர் சேகர்பாபு - Alleluya

48 முதுநிலைத் திருக்கோயில்களிலும் முதற்கட்டமாக செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

48 கோயில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும்

author img

By

Published : Dec 29, 2022, 9:15 AM IST

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம், திருப்பணிகள், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டிற்கு மேல் திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள், திருத்தேர் திருப்பணி, திருக்குளப் புனரமைப்பு, உள்ளிட்ட இதர கட்டுமானப் பணிகளின் பணி முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் மகா சிவராத்திரி விழா, அன்னதானம், பசுமடம், உலோகத் திருமேனி பாதுகாப்பு மையம், அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், திருக்கோயில் யானைகள் மண்டபம், ஒருகால பூஜை திட்டம், திருக்கோயில்களில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதி அமைத்தல், மண்டல வாரியாக விரிவான ஆய்வு மேற்கொண்டதோடு, மண்டல இணை ஆணையர்கள் அடிக்கடி கள ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திடத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்திற்குப் பின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்புகள் மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து மாதந்தோறும் சீராய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு நடைபெற்ற 18வது சீராய்வுக் கூட்டத்தில் மானியக் கோரிக்கை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் வருங்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

2021 - 22ஆம் ஆண்டு மற்றும் 2022 -23ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மானிய கோரிக்கை அறிவிப்புகளில் 80 சதவீத அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிதியாண்டுகள் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் சிறப்புமிக்க ஆண்டுகளாக அமைந்துள்ளன. மறைந்த கருணாநிதியின் நினைவாக முதலமைச்சரால் ஆணையர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட கலைஞர் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 20 மண்டல திருக்கோயில்கள் மூலம் 500 திருமணங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது இணங்க, முதற்கட்டமாக 233 திருமணங்களை முதலமைச்சர் நடத்தி வைத்தார்.

மீதமுள்ள திருமணங்களை வருகிற பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பக்தர்களை அழைத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டதன் முதற்கட்டமாக 67 பக்தர்கள் 10 நாட்கள் பயணமாக வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இவர்களுக்கு உதவியாக 5 அலுவலர்கள் உடன் செல்கின்றனர். மகா சிவராத்திரி விழாவான 18.02.2023 அன்று சென்னை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோயில்களில் தெய்வத்திற்கு நிகராக மதிக்கப்பட்ட, இறைவனடி சேர்ந்த 10 யானைகளுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட 7 ராஜ கோபுர திருப்பணிகளில் 4 ராஜ கோபுர பணிகளுக்கு அரசாணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதர 3 பணிகளுக்கு விரைவில் அரசாணை வழங்கப்படும். திருச்செந்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பக்தர்கள் தங்கும் விடுதிகள், கடலரிப்பை தடுக்கும் வகையிலும், பக்தர்களுக்குப் பாதுகாப்பாகவும் கருங்கல் கொட்டும் பணிகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

திருக்கோயில் பணியாளர்களுக்கு இந்தாண்டு போனஸ் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்.
திருக்கோயிலில் பணிபுரிகின்ற சுமார் 18000 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்குக் கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கப்படும். ஒரு கால பூஜை திட்டத்தில் வரும் நிதியாண்டில் கூடுதலான திருக்கோயில்களை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலைத் திருக்கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதோடு, சோளிங்கர் மற்றும் ஐயர்மலை ஆகிய திருக்கோயில்களில் கம்பிவட ஊர்தி பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி, சதுரகிரி, பருவதமலை, போளூர் மற்றும் கண்ணகி கோயில் ஆகிய 5 மலைக் கோயில்களில் ஏற்கனவே உள்ள மலை பாதையை சீரமைக்கின்ற பணிகள், திருத்தேர் பணிகள், 129 பசுமடங்களின் மேம்பாடு, துளசியாபட்டினத்தில் அவ்வையார் மணி மண்டபம் கட்டுமானம் போன்ற பணிகளின் பணிகளின் முன்னேற்றத்தை விரிவாக ஆய்வு செய்தோம்.

இப்படி மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளின் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் பணிகள் வேகம் பெற்று வருவதோடு, அலுவலர்களும் உத்வேகம் பெற்று செயல்பட்டு வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒரு சில திருக்கோயில்களில் நடைபெற்ற சாதிய தீண்டாமையை முறியடிக்கின்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த ஆட்சியை பொறுத்த அளவில் இன்னார் இனியவர், ஏழை, பணக்காரர், சாதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடே இல்லை. அனைவருமே சமமானவர்கள். இதுதான் திராவிடம் மாடல் ஆட்சியாகும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு "செல்போன் பாதுகாப்பு பெட்டகத்தை முதற்கட்டமாக வருகிற 30ஆம் தேதி திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடங்கவுள்ளோம். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அதிகம் வருகை தரும் 48 முதுநிலை திருக்கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, இது தொடர்பாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலும், திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்களிலும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தோம். மேலும், இது தொடர்பாக ஆணையர் அவர்கள் சம்பந்தப்பட்ட திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு ஏற்கனவே பெருந்திட்ட வரைவு ஒன்று தயாரிக்கும் பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்தப் பெருந்திட்ட வரைவுக்காக 58.75 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதியை தற்போது முதலமைச்சர் வழங்கியுள்ளார்கள். ஏற்கனவே திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பெரிய பாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு 130 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பெருந்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல முதற்கட்டமாக பிரசித்திபெற்ற 10 திருக்கோயில்கள் பெருந்திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளன.

கிறிஸ்துமஸ் விழாவில் நான் அல்லேலூயா என்று குறிப்பிட்டது தொடர்பான விமர்சனத்திற்கு அதற்கான விளக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் உடுத்துகிற உடை யாரால் நெய்யப்பட்டது என்று தெரியாது. நாம் உண்ணுகின்ற உணவு யாரால் வந்தது என்றும் தெரியாது. இருக்கின்ற இடம் யாருக்கு சொந்தமாக இருந்தது என்று தெரியாது. மனதால் நாம் மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதில் பிரிவினைகளுக்கு இடமில்லை.

அல்லேலூயா, அல்லேலூயா என்பது ஒன்றும் தீவிரவாத சொற்கள் அல்ல. இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அல்லேலூயா, அல்லேலூயா என்ற வார்த்தைக்கு இறைவா போற்றி போற்றி என்பது தான் பொருளாகும். இது கிரேக்க லத்தின் மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் அல்லேலூயா என்று சொன்னதில் தவறில்லை. கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு நான் செல்லுகின்ற போது இந்த வார்த்தையை தவறாமல் உச்சரிப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் திருமதி ந.திருமகள், மா.கவிதா, சி.ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் சு.ரெகுநாதன் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ' சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம் மோசடி விவகாரம்- 11.62 கோடி மதிப்பிலா பொருட்கள் முடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.