இது தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஜனவரி 5ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்றுவரும் அமைச்சரை, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் இயல்பான நிலையில் உள்ளது. மேலும் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
சாதாரணமாக ஒரு அறை காற்றில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவே அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. வேறு எந்தவிதமான கூடுதல் ஆக்சிஜன் துணையும் அவருக்கு தேவைப்படவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்’ என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கங்குலி