ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை மையம் - தமிழ்நாடு மீனவர்கள் எச்சரிக்கை

Tamil Nadu Rain Update: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 7:57 PM IST

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்ச மழைப்பதிவு: "பூண்டி (திருவள்ளூர்) 10 செ.மீ., தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 9, வாலாஜா (ராணிப்பேட்டை) தலா 8 செ.மீ., ஆற்காடு (ராணிப்பேட்டை), ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா 5செ.மீ., மழை பதிவாகியுள்ளது

மேலும் அம்பத்தூர் (சென்னை), செய்யார் (திருவண்ணாமலை) தலா 4 செ.மீ., மழை பதிவு, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கல்லந்திரி (மதுரை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), தேவாலா (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பொன்னேரி (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை), பொன்னை அணை (வேலூர்) தலா 3செ.மீ., மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மீனவர்களுக்கான எச்சரிக்கை: 29.09.2023 மற்றும் 30.09.2023 ஆகிய தேதிகளில் தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: உலக இருதய தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு இருதய பரிசோதனை முகாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.