ETV Bharat / state

12 மணிநேர வேலை சட்ட மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ்: சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு! - தமிழக சட்டப்பேரவை

12 மணிநேர வேலை சட்ட மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது என தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tamil Nadu Legislative Assembly Secretary officially announced the 12 hour work bill is being withdrawn
12 மணிநேர வேலை சட்ட மசோதா வாபஸ் பெறப்படுவதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
author img

By

Published : May 4, 2023, 12:14 PM IST

சென்னை: தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால், அந்த மசோதா மீதான சட்ட முன்னெடுப்பை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனை அடுத்து மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவப்பு சட்டை அணிந்துச் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், மே தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24-ஆம் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன்.விட்டுக் கொடுப்பதை நான் அவமானமாக கருதவில்லை. பெருமையாகவே கருதுகிறேன். மேலும் இது குறித்து செய்தித் துறை சார்பில் அறிக்கை வரும்" என்று அவர் கூறினார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் இதுகுறித்த ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 8/2023) சட்டமன்றப் பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு. ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர், இச்சட்டமுன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நிலையில், இச்சட்டமுன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென முடிவெடுத்ததையடுத்து, அரசால் திரும்பப் பெறப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பெறுகிறது. என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சென்னை - திருச்சி ஹைவே ஹோட்டல்களில் அதிரடி சோதனை.. விக்கிரவாண்டியில் கெட்டுப்போன உணவுகள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.