தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதி தீவிரமாக பரவி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க அலுவலர்கள், அரசு கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்தபாடில்லை. எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் கரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "தன்னுடைய மனைவி, மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனக்கு செய்யப்பட்ட சோதனையில் கரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இதில் மறைக்க எதுவுமில்லை. தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் தொற்று சமூக பரவலாக மாறவில்லை. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தான் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மின் கட்டணம் உயர்வு - கருப்புக் கொடி ஏந்தி திமுக ஆர்ப்பாட்டம்