சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது.
இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை தற்காலிகமாக சீரமைக்க முதற்கட்டமாக ரூ.549.63 கோடி, நிரந்தரமாக சீரமைக்க ரூ.2079.89 கோடி என மொத்தம் ரூ.2629.29 கோடி பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யகோரி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர் கணக்கெடுக்கப்பட்ட கூடுதல் சேத விவரங்களின் படி, தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ.521.28 கோடியும், நிரந்தரமாக சீரமைப்பு பணிக்காக ரூ.1475.22 கோடி என மொத்தம் ரூ.1996.50 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அரசிற்கு சமர்பிக்கப்பட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ள தொகை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1070.92 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிக்காக ரூ.3554.88 கோடி என மொத்தம் ரூ.4625.80 கோடி கூடுதலாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாற்று நட்டு போராட்டம் - சாலையை சீரமைக்க வலியுறுத்தல்