ETV Bharat / state

10, 11, 12 பொதுத்தேர்வுக்கு டிச.26 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்! - இ சேவை மையம்

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Dec 21, 2022, 5:04 PM IST

சென்னை: 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம்.

தட்கல் திட்டம்: தனித்தேர்வர்கள் விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஜனவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் அரசுத்தேர்வுகள் இயக்கத்தின் இ-சேவை மையங்களின் மூலம் ஆன்லைனில் கூடுதலாக மேல்நிலை வகுப்பிற்கு ரூ.1000 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுத்துறையின் இ-சேவை மையங்கள் குறித்த விவரங்களை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாடகை வீட்டில் வசித்த மூதாட்டி பெயரில் ரூ.8 கோடி வரி ஏய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.