ETV Bharat / state

HSC Result Date: +2 தேர்வு முடிவு வெளியீட்டு தேதி அறிவிப்பு! - Tamil Nadu schools

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12th result date
கோப்பு படம்
author img

By

Published : Apr 26, 2023, 11:13 AM IST

Updated : Apr 26, 2023, 2:19 PM IST

சென்னை: 2022-23ஆம் கல்வியாண்டின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர்.

புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7728 மாணவிகள் என 14 ஆயிரத்து 710 பேர் 40 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனித்தேர்வர்களாக 14 ஆயிரத்து 966 மாணவர்கள் எழுத 134 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்காக 3,185 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை பொறுத்தவரையில் 50 ஆயிரம் பேர் மொழி தேர்வுகளை எழுதாமல் இருந்தனர். கரோனா காலத்தில் மாணவர்களை அரசு தேர்ச்சி பெற செய்திருந்ததால் மாணவர்களுக்கு தேர்வு பயம் அதிகரித்த மாணவர்கள் தேர்வினை தவிர்த்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து மாணவர்கள் தேர்வு எழுதாதற்கான காரணம் குறித்து பெற்றோர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. மே மாதம் 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் 2 நாட்கள் முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். இதனிடையே நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு தேதி மாற்றியமைக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் 6 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறை: காரணம் என்ன?

Last Updated : Apr 26, 2023, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.