சென்னை: மகாத்மா காந்தியின் நினைவு நாளைக் குறிக்கும் விதமாகவும், நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 அன்று தியாகிகள் தினமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.
மத்திய அரசின் உத்தரவுப்படி, ஜனவரி 30ஆம் தேதி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிலையில், மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு நாளான இன்று (ஜன.30) தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மாகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்று, ஹரிஜன் சேவக் சங்கத்தின் மாணவர்கள், ராஜ்பவன் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.