இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், 22 துணை ஆட்சியர்களைப் பணி நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, விருதுநகர் தட்கோ மாவட்ட மேலாளராக இருந்த முகம்மது ஜாகிர் உசேன் திருவள்ளுவர் மாவட்ட நில எடுப்பு அலுவலர் மற்றும் தகுதிவாய்ந்த அலுவலர் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் துணை ஆட்சியராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியராக இருந்த விஜயா, திருநெல்வேலி தட்கோ மாவட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளராக இருந்த புகாரி மதுரை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் தனித்துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியராக இருந்த திவ்யா சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் தனித்துணை ஆட்சியராக இருந்த காமராஜ் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் என மொத்தம் 22 துணை ஆட்சியர்கள் பணிமாறுதல் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.