தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில், "தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தலின் பெயரிலும், தமிழ்நாடு அரசின் கொள்கையின் அடிப்படையிலும் சர்வீஸ் மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு மாநில ஒதுக்கீட்டில் வழங்க தமிழ்நாடு அரசு பல வருடங்களாக முயன்றுவருவதற்கு 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் சார்பாக அரசிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மாநில அரசு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் எனக் கூறி உள்ளது. இதில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து தீர்ப்பினைப் பெற்றுத் தந்துள்ளது.
மேலும் இந்திய மருத்துவக் கழகம் வரம்பிற்குள் சர்வீஸ் கோட்டா முடிவு செய்ய இயலாது, மாநில அரசுதான் முடிவுசெய்ய வேண்டும் எனச் சிறப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அந்தத் தீர்ப்பை தொடர்ந்து முதல்கட்டமாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வில் சர்வீஸ்கூட வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவைக்கிறது.
இந்தியாவிலேயே அதிக சூப்பர் ஸ்பெஷாலிட்டி சீட்டுகளை தமிழ்நாடு கொண்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவர்களுக்கு சர்வீஸ் கோட்டா போன்றவை இல்லாத நிலையில், பெரும்பாலான இடங்களைப் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் எடுத்துவிடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவாதம் அளித்தாலும் பெரும்பாலும் இங்கு பணி செய்யாமல் அவர்கள் மாநிலத்திற்கு சென்றுவிடுகின்றனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50 விழுக்காடு அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்று அரசு அதனை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் சர்வீஸ் கோட்டா: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை - தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள்
சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50 விழுக்காடு அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.