பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, ஊரக சாலை உள்கட்டமைப்புகளை சீர்செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்துள்ள ஊரக சாலைகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
![உள்ளாட்சி சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/road_1611newsroom_1605523359_225.png)
தமிழ்நாடு ஊரக சாலை உள்கட்டமைப்பு நிதியத்தின்கீழ் நான்காயிரத்து 376 கி.மீ. சாலைகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரக சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கியுள்ள தமிழ்நாடு அரசு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 11 ஆயிரம் கி.மீ. தூர சாலைகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.