ETV Bharat / state

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு - Chennai District important News

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் வலுவூட்ட முதலமைச்சர் உத்தரவின் பேரில் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு

author img

By

Published : Dec 15, 2022, 6:23 PM IST

சென்னை: உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறையின் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தபோது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007ஆம் ஆண்டு விதிகளின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தாமாக பணிகளை தேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளாட்சிகளில் முறையான மக்களாட்சி மலர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.

அதன்படி, அப்போது கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் வரையிலுமான பணிகளை உரிய ஊராட்சிகளின் தீர்மானத்தின் மூலம் தாமாகவே தேர்வு செய்து செயல்படுத்திட அதிகாரம் வழங்கப்பட்டது.

அதன்பிறகு எந்தவொரு மாற்றமும் இன்றி தற்போது வரை அதே நிதி அதிகாரம் வழங்கும் நடைமுறையே இருந்து வருகிறது. இந்த அரசு பதவியேற்றவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலிமைப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை தற்போது உயர்த்தி வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 6.12.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய அரசாணையின்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் பணிகளை தாமாகவே உரிய தீர்மானம் நிறைவேற்றி மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தி, உள்ளாட்சியில் நல்லாட்சியை கிராமப்புற மக்களுக்கு வழங்க வழிவகை ஏற்படுத்தும்' என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் - 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.