ETV Bharat / state

TNPSC, SSC, IBPS, RRB தேர்வர்களுக்கு நற்செய்தி - latest government job tamil nadu

தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் சார்பில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் (TNPSC, SSC, IBPS, RRB etc) போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்குதல் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

TNPSC, SSC, IBPS, RRB தேர்வர்களுக்கு நற்செய்தி

author img

By

Published : Mar 14, 2023, 7:51 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது .

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 01- 01-2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை. பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 15.03.2023 முதல் 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684 மற்றும் 8489334419 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு. தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். 10.04.2023 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு சார்ந்த பணிகளுக்கு துறை வாரியாக தேர்வுகள் நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7,301 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2022 ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினர்.

அதன்பின் கடந்த அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகியும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் ஏற்படும் தாமதத்தால் குரூப் 4 தேர்வை எழுதிய சுமார் 18 லட்சம் தேர்வர்கள் காத்துக் கொண்டு இருக்கும் நிலை உருவாகி உள்ளது.

இதையும் படிங்க: TNPSC குரூப்-4 தேர்வு முடிவு எப்போது? - ட்விட்டரில் டிரெண்டாகும் #WeWantGroup4Results

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.